அதிகரிக்கும் போலி என்கவுண்டர்கள் உண்மை அறிக்கை வெளியிட்ட (JAACT) அமைப்பினர்..!

6
343

அதிகரிக்கும் போலி என்கவுண்டர்கள் குறித்து JAACT அமைப்பினர் தமிழ்நாடு காவல் துறையினர் மீது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காட்டு பகுதியில் கொம்பன் என்கிற ஜெகன் என்பவரை போலீசார் பிடிக்க சென்றபோது அரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறி ஜெகனை என்கவுண்டர் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் (JAACT) ஆரம்ப கட்ட கள ஆய்வுப் பணியை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் நடந்திருப்பது போலீஸ் மோதல் படுகொலை என தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் காவல்துறைக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனைக்குறிச்சி பகுதி சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமார் மகன் கொம்பன் ஜெகன் என்ற ஜெகதீஷ் வயது 30. பள்ளி படிப்பை முடித்துவிட்டு பி.இ படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்துள்ளார். முதன் முதலில் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையில் முதல் ஆளாக நின்று அடிதடி இறங்கி இருக்கிறார்.

அதுவே பின்னாளில் அவர் குற்ற பின்னணி உடையவராக மாறுவதற்கான தொடக்கப் புள்ளியாக மாறி இருக்கிறது. இதனை தொடர்ந்து கொள்ளை அடித்த வழக்கு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் வழக்கு என 2012 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டுக்குள் திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, வரையில் பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கீழே ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களை செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் பல ஆண்டுகள் கழித்து இருக்கிறார்.

JAACT அமைப்பினர் தமிழ்நாடு காவல் துறையினர் மீது வெளியிட்ட அறிக்கை

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்து ஜெகன் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன்பின் இனி எந்த குற்ற செயல்களில் ஈடுபடப் போவதில்லை எனவும், மனைவியுடன் சேர்ந்து வாழ போகிறேன் எனவும் ஜெகன் நன்னடத்தை பத்திரம் எழுதி கடந்த ஆறு மாதத்தில் முன்பு காவல்துறையிடம் வழங்கி இருக்கிறார். இப்போது காரை ஓட்டி வந்த காதர்மொய்தீன் ஏதோ டிரிங்க் அண்ட் டிரைவ் சோதனை என நினைத்து காரை விட்டுக் கீழே இறங்கி போலீசாரிடம் வாயை ஊதி காட்டியுள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் அவரது இரு கைகளை பின்பக்கமாக மடக்கி கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு எங்கடா போய் வருவீர்கள், ஜெகனுடன் என்று கேட்டு கொண்டவாறு அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா காரில் ஏற்றி கண்களை துணி கொண்டு கட்டி விட்டு காரை எங்கேயோ எடுத்துச் சென்றுள்ளார்கள்.

அதே நேரத்தில் மாருதி ஸ்விப்ட் காரில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகாமையில் உட்கார்ந்த ஜெகனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவரது கையில் கை விலங்கை காரில் இருக்கையோடு சேர்த்து பூட்டி இருக்கிறார். அதே நேரத்தில் காருக்குள் இருந்த நான்கு நபர்களின் பார்த்து அசைந்தால் அனைவரும் என்கவுண்டர் செய்து விடுவோம் என போலீசார் மிரட்டி உள்ளனர். அவர்கள் நால்வரும் எங்களை விட்டு விடுங்கள் என்று கேட்டபோதெல்லாம் நீங்கள் ஏன் ஜெகனோடு சென்றீர்கள், அதனால் தான் உங்களை அழைத்துச் செல்கிறோம். மாலையில் எழுதி கொடுத்துவிட்டு சென்று விடுங்கள் என்று சொல்லி வந்ததை நம்பியதாலும் பயத்தினாலும் தாங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தங்களை விட்டு விடுவார்கள் என்ற நம்பி அனைவரும் எந்த எதிர்ப்பின்று அவர்களுடன் சென்று இருக்கிறார்கள்.

அதனால் உங்கள் மீது சிறு வழக்கு போடுகிறோம். ஒரு 10 அல்லது 20 நாட்கள் ஜாமினில் வெளிவந்து விடலாம் என்று சொல்லி நீதிபதி கேட்கும் போது நடந்தது எதையும் சொல்லக்கூடாது. நாங்கள் சொல்வது போல் சொல்ல வேண்டும் என்று சொல்லி மிரட்டி, மாலை சுமார் 7 மணி அளவில் மணப்பாறை நீதிபதி முன்பாக ஆஜர் படுத்தி அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். திருச்சி சிறைக்கு வந்த மறுநாள் தான் ஜெகன் அவர்களை தங்களிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று பிறகு போலீசார் சுட்டுக்கொன்று விட்டு என்கவுண்டர் என்ற நாடகம் ஆடி பொய் செய்திகளை பரப்பி வருவதையும் அவற்றை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பாவிகளான அவர்கள் நால்வரும் மீதும் போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்ய எடுத்து வந்ததாக போதை பொருள் மட்டும் ஆயத்த தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டிருப்பதையும் அறிந்து மிகவும் அவர்கள் பயந்து போய் சிறைக்கு வரும் அவரது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினரிடம் அழுது புலம்பி வருவதாக மிகவும் பயந்து கொண்டே தெரிவித்தார்கள்.

ஜெகனை மட்டும் தனிமைப்படுத்தி போலீசார் வாகனத்தில் ஏற்றி வந்து திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் பி.கே அகரம் அருகாமையில் உள்ள எ.டு.பி அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு பின்பக்கம் அமைந்துள்ள வனப்பகுதியில் மதியம் சுமார் 1:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் சார்பு ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஜெகன் இறந்துவிட்டார். அதன் பின்பு ஆம்புலன்ஸ் வரவழைத்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு ஜெகனைக் கொண்டு சென்றுள்ளனர் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என தெரிவித்ததால் ஜெகனின் உடலை உடற்கூராய்வு செய்ய திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

1. காவல் மரணங்கள் நிகழ்ந்த பின்பு பின்பற்ற வேண்டிய சந்தோஷ் (எதிர்) மதுரை மாவட்ட ஆட்சியர் வழக்கின் உயர் நீதிமன்ற தீர்ப்பினை போலீசார் பின்பற்றவில்லை. குறிப்பாக 23.11.2023 அன்று ஜெகனின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடலை பார்த்து காயங்களை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் உடற்கூறாய்வுக்கு பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடற்கூறாய்வு அறிக்கை உடற்கூறு ஆய்வின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எதுவும் வழங்கப்படவில்லை.

JAACT அமைப்பினர் தமிழ்நாடு காவல் துறையினர் மீது வெளியிட்ட அறிக்கை

2. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமையை திட்டமிட்டு போலீசார் தடுத்துள்ளனர். ஆகவே இக்குற்றத்தில் ஈடுபட்ட போலீசார் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

3. போலி மோதல் சாவில் மரணமடைந்த ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது உண்மை. அவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குற்றப் பின்னணி கொண்ட ஜெகன் மீது விரைவாக சட்டப்படி நடவடிக்கையை எடுத்து அவரை சிறையில் வைத்திருக்க வேண்டியது காவல்துறையின் சட்டக் கடமையாகும். சமூகத்தில் ரவுடிகள் வளர்கிறார்கள், இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது, என்கின்ற கருத்தை பொது சமூகத்தில் வளர்த்து, இதை நியாயப்படுத்த இது போன்ற போலி மோதல் வழிகளில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

4. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 11 போலி மோதல் சாவுகள் நடந்துள்ளன. இத்தகைய செயல்களால் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழுந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு இது போன்ற போலி மோதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

5. ஜெகனோடு சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட காதர் மொய்தீன், முகமது ரிஸ்வான், நிகழ்பிரியன், முகமது யாசிக் ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.

6. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து ஜெகனை கடத்தி திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்நிகழ்வினை சிறப்பு புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், நீதியும் பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோறுகின்றது.

இவ்வாறு  JAACT அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்

6 COMMENTS

  1. கொடுமையிலும் கொடுமை..!
    காவல் துறை’ காட்டு மனிதர்கள் போல் நடக்கும் செயல்…!
    காவல் துறை’ அன்பையும்
    கடைப்பிடித்திட பயிற்சி அளித்திடல் வேண்டும்..!

  2. cialis daily tadalafil (generic)

    அதிகரிக்கும் போலி என்கவுண்டர்கள் உண்மை அறிக்கை வெளியிட்ட (JAACT) அமைப்பினர்..! – thenewscollect.com

  3. buy essay papers cheap

    அதிகரிக்கும் போலி என்கவுண்டர்கள் உண்மை அறிக்கை வெளியிட்ட (JAACT) அமைப்பினர்..! – thenewscollect.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here