கோவை

கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் என தெரியாமல் சிறுநீர் கழித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையை சேர்ந்த ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களோடு வெளியூர் பயணம் செல்வது என்றால் எல்லோருக்கும் விருப்பம் தான் சில நேரங்களில் அது நல்லபடியாக அமையும் சில நேரங்களில் அது வேறு விதமாக அமைந்து விடும். அப்படித்தான் கோவையில் நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த ஒரு குழுவுக்கும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே ஒரு மோதல் அந்த மோதல் சாதாரணமாதல் அல்ல மிகப்பெரிய மோதலாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை நடந்திருக்கிறது போலீசார் அதற்கு பிறகு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட மோதலுக்கான காரணம் ஒன்றும் இல்லாதது என்பதுதான்.

சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கோவை ஈஷா மையத்திற்கு செல்ல கோவை வந்தனர். ஈசா சென்று விட்டு மீண்டும் ரயில் மூலம் சென்னை செல்ல கோவை ரயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு இளைஞருக்கு அவசரமாக சிறுநீர் வந்ததால் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டு அருகே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழிக்க கூடாது என கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த அடி வாங்கிய நபர் நண்பர்களை அழைத்தவுடன் நண்பர்களும் அங்கு வந்து ஆட்டோ ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து தாக்கியும், கால்களாக அடித்து விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பந்தைய சாலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஏதோ போல இருந்தது அந்த அளவுக்கு மிக மூர்க்கத்தனமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் வந்தும் கூட தாக்குதல் என்ற பாடில்லை தொடர்ந்து தாக்கிக்கொண்டு எழுத முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் அந்த பகுதியில் இருந்து வந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here