வாக்கு இயந்திரம்

தேர்தல் முடிவு பெற்றதும் வாக்கு பெட்டிகள் முழுமையும் பாதுகாப்போடு வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு சென்று ஆட்சியர், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் என பலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம். அப்படி சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் வாக்கு இயந்திரங்களுக்கு அரசியல் கட்சி பிரதிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.மேலும் காவலர்கள்,தேடை படுமானால் துணை ராணுவப்படை காவலர்களும் பாதுகப்பு பணியில் ஈடுபடுவார்கள்.அதே போன்று மையத்தை கண்கானிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்கானித்து வருவார்கள். இந்த நிலையில் தான் உதகையில் வாக்கு பெட்டியில் வைத்திருக்கும் வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமரா 8 நிமிடம் இயங்காமல் போனதுதான் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது

உதகையில் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்சி முகவர்கள் பார்க்கும் டிவியில் 8 நிமிடம் சிக்னல் கட் கட்சியினர் அதிர்ச்சி..மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது நீலகிரி தொகுதியில் ஆறு சட்டமன்றத்திற்கான வாக்குப்பெட்டிகள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன .

இந்த பகுதிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி தீவிர கண்காணிப்பில் உள்ளது.இந்த நிலையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டராங் ரூம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் கட்சி முகவர்கள் பார்க்கக்கூடிய TV களின் திரையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8 நிமிடங்கள் TV Screen காட்சியளிக்கவில்லை.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் கட்சி முகவர்களிடையே தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட காரணத்தினால் இந்தத் தவறு நடந்துள்ளதாகவும் டிவி திரையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 8 நிமிடம் தெரியாத சிசிடிவி காட்சிகளை கட்சி முகவர்களுக்கு காண்பித்தனர் அதில் கேமரா செயல்பாட்டில் இருந்ததாகவும் டிவிக்கு வரும் சிக்னலில் கோளாறு காரணமாக டிவி திரையில் காட்சிகள் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் டிவி யின் திரையில் CCTV காட்சி செயல்பாடுகள் தெரிய துவங்கின.வாக்கு என்னும் போது தான் இந்த சிசிடிவி கோளாறு காரணமாக என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள முடியும் அதுவரை அரசியல் கட்சிகள் பொறுமை காப்பது தான் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here