மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காணலாம்.

சந்தியா மருத்துவர் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம்

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள நன்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேடம்பட்டு கிராமத்தில் சுமார் 15000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா மருத்துவர் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

சந்தியா மருத்துவர் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம்

மேலும் தனியார் நிறுவனமான இந்த நிறுவனம் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணியினை செய்து வருகிறது. ஆனால் அதை முறையாக செய்யாமல் கழிவுகளை அந்த பகுதியிலே எரித்து வருகிறது.

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தால் அந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு நோய்கள் அதிகரித்து வருவதாகவும் தேம்பல், படர்தாமரை போன்ற நோய்கள் அறிகுறி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

மேலும் தோல் நோய் அதிகரித்து வருவதாகவும் பின்னர் குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் சுவாச கோளாறு பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் ஆடு, மாடு போன்றவையும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சந்தியா மருத்துவர் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

இதனால் அந்த கிராம மக்கள் இதற்கு சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம பலமுறை அகற்றக்கோரி மனு அளிக்கும் உள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

எனவே சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி அது கிராமத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாக போராட்டம் அறிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here