ஊத்தங்கரை: 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன் .

0
28
நாணய புகைப்படம்

ஊத்தங்கரை அருகே ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி ஆபத்தில் இருந்த சிறுவனை காப்பாற்றிய ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜயபிரியா தம்பதியர் . இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 வயதில் வினித் என்ற மகன் உள்ளார்.

வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கையில் வைத்திருந்த ₹5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். அந்த நாணயம் தொண்டை குழியில் சிக்கியதால் வினித் வலியில் துடித்துள்ளார் . இதனைக் கண்ட அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வினித்தை உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மதன்குமார், சதீஷ், செந்தில் உள்ளிட்ட மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர். தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினார்.

நாணய புகைப்படம்

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் அவர்களுக்கு, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் மருத்துவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளும் தெறிவித்து வருகின்றனர்கள்.

மேலும் ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி ஆபத்தில் இருந்த சிறுவன் வினித்தை காப்பாற்றிய ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here