திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 ஆம் ஆண்டு பெருவிழா முதல் நாள் திருத்தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள 509 ஆண்டுகள் மிக பழமையான புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 ஆம் ஆண்டு பெருவிழா கோலாகலம்

ஆனால் திருத்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அன்னையின் திருவுருவ சிலை ஏந்திய திருத்தேரானது வான வேடிக்கைகள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.

முன்னதாக 10 நாட்கள் நவநாள் மன்றாட்டு கூட்டங்கள் நடைப்பெற்று முதல் நாள் சனிக்கிழமை குழந்தை இயேசு, புனித சூசையப்பர், அந்தோணியார் உள்ளிட்டோரின் சிறிய தேர்கள் வலம் வர புனித மகிமை மாதா திருத்தேர் ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு தரிசித்தனர்.

பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 ஆம் ஆண்டு பெருவிழா கோலாகலம்

அப்போது பொறி மற்றும் உப்பு, மிளகினை தெளித்து தங்கள் நேர்தி கடனை செலுத்தினர்.

இதனால் நடுவூர் மாதா குப்பம் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்த இந்த பெருவிழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.


பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 ஆம் ஆண்டு பெருவிழா கோலாகலம்

மேலும் இன்று ஞாயிறு 2 ஆம் நாள் பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கு பெறும் ஆடம்பர திருத்தேர் பவனி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here