வட காஞ்சி ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சுமார் ஒரு கோடி மதிப்பில் கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த மீஞ்சூரில் அமைந்துள்ள வட காஞ்சி என அழைக்கப்படும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ. பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவானது சுமார் ஒரு கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அப்போது யாக கலச பூஜைகளுடன், கலசநீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கலச நீர் கொண்டு ராஜகோபுரம் விமான கலசங்களுக்கும் ஸ்ரீ. பெருந்தேவிக்கும், வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாள் ராமானுஜர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதில் பொன்னேரி மீஞ்சூர் செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ. வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.