தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த கனிமொழி எம்.பி கடந்த டிச. 27-ல் பார்வையிட்டார். அப்போது, திடிரென்று பாா்வை குறைபாடுள்ள 7 ஆம் வகுப்பு மாணவி ரேவதி என்பரை அவா் காண நோ்ந்தது. அந்த சிறுமியை அழைத்துப் பேசிய கனிமொழி எம்.பி.யிடம், ‘தனக்கு கண் பார்வையில் பிரச்சனை உள்ளது. அதற்கு மருத்துவச் சிகிச்சை செய்ய உதவ வேண்டும்’ என சிறுமி வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கண் பார்வை குறைபாடுடைய 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, தனது சொந்த நிதியின் மூலம் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மீண்டும் கண்பார்வை கிடைக்க வழிவகுத்துள்ளார் கனிமொழி. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, கடந்த 27 ஆம் தேதி அன்று ஆய்வு செய்தார்.

கனிமொழி எம்.பி

அப்போது, கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும், நான் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனை அடுத்து சற்றும் யோசிக்காத கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்து விடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி.ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று தீவிர அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி இன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார்.

கனிமொழி எம்.பி

மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்து கொண்டே இருந்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு மிகவும் நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here