ஆட்டோ பிரபா

மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம்.அடிமைப்பட்டு கிடந்த பெண்கள் விடுதலை விலங்கை உடைத்து சுதந்திர பூமியை ரசிக்க வந்த தினமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,அடிமை இருள் சூழ்ந்த சமூகத்தில் வாழக்கூடிய நிலைதான் இன்னமும் பலருக்கு இருந்து வரும் நிலையில் கூட போராடிய தன் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார் பிரபா.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள கண்டியமடை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபா. 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார், அவருக்கும் அதே ஊரை சேர்ந்த அசோக் என்பவருடன் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 10 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக போனாலும் உடல் நல கோளாறு காரணமாக இயற்கை அசோக்கை அழைத்துக் கொண்டது. இரண்டு ஆண் பிள்ளைகளோடு நெருக்கடியாக நின்றார் பிரபா.

பிரபா

கணவன் இழந்தாலும் தன் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செங்கல் சூளைகள், மளிகை கடைகள், விவசாய கூலி என பல வேலைகளை மேற்கொண்டார் பிரபா. இருந்தாலும் குடும்பம் நடத்த போதிய பொருளாதாரம் பெற முடியவில்லை பிரபாவால். தன்னம்பிக்கையோடு சுய தொழில் தொடங்கலாம் என்றால் எந்த தொழிலும் தெரியவில்லை பிரபாவிற்கு. ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது பிரபாவிற்கு. அதற்காக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஓட்டுநர் உரிமம் பெற்றார் பிரபா.

சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என்கிற எண்ணம் பிரபாவிற்கு ஏற்பட்டது. பெரும் முயற்சியில் சொந்தமாக தனக்கென ஒரு ஆட்டோ வாங்கி விட்டார். ஆனாலும் இன்றுவரை எந்த ஆட்டோ சங்கத்திலும் அவரை சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை சங்கங்கள். ஆனாலும் சங்கங்கள் இல்லாமல் தனிச்சையாக செயல்படலாம் என முடிவெடுத்த பிரபா இன்றும் விழுப்புரம் பகுதிகளில் நிற்காமல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

சும்மா விடுமா சமூகம் முன்னேற்றத்திற்கு தடை போட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க ஐந்து நாட்கள் ஆட்டோவை இயக்க விடாமல் தடுத்து விட்டார் போக்குவரத்து அதிகாரி ஆனாலும் தொடர்ந்து இன்று வரை போக்குவரத்து போலீசார் தனக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தான் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு கனவன் இல்லாமல் போராடி வாழ்வதற்கு எவ்வளவோ முயற்சி எடுக்கும் நிலையில் இப்படியான தடைகள் தன்னை வந்து சேர்கிறது என்றாலும் கூட தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன் என்கிற மன உறுதியோடு இருக்கிறார் பிரபா.

 

கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வருவாய்த்துறை இடம் ஆதரவற்றோர் விதவை சான்று கேட்டு மனு செய்து ஒவ்வொரு முறை கோட்டாட்சியர் புதிதாக பொறுப்பேற்கும் பொழுதும் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும் கூட இதுவரை அவருக்கு ஆதரவற்ற விதவை சான்று தரவில்லை வருவாய்த்துறை. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிற இந்த சூழ்நிலையில் பிரபாவிற்கு ஆதரவற்றோர் விதவைச் சான்று பெற்றுத் தர யாராவது முன்வருவார்களா? என்கிற கேள்வி எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. ஆனாலும் கூட இந்த சமூகத்தை ஒரு சவாலாக எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பிரபா உண்மையிலே பிரபா ஒரு தங்க மங்கை தான் வாழ்த்துக்கள் பிரபா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here