வித்தியஸ்ரீ

பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்ததால் வளர்க்க இயலாத பெற்றொர்களிடமிருந்து தூக்கி வந்து வளர்த்த பாட்டி, வித்யாஸ்ரீயை படிக்கவைத்து இன்று பி.எட் படித்து முடித்து டீச்சர் பணிக்காக காத்திருக்கிறார்.இப்போது இவர் வாழ்க்கையில் மேலும் ஒரு முன்னேற்றம் ஆம் இரண்டு கைகள் இல்லாமல் பிறந்த வித்தியாஸ்ரீ இரு சக்கர வாகனம் ஓட்டுகிறார்.சென்னையை சேர்ந்த ரவி என்பவர் நன்கொடையாக கொடுத்துள்ளார்.சங்கர் என்பவர் வடிவமைத்துள்ளார்.

அப்பாவும் அம்மாவும் வெறுத்து விட்டார்கள்…! ஆமாம் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தால்…? அந்த குழந்தையை பாட்டி வீரம்மாள், தாத்தா ராமரும் தூக்கிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூரில் கொண்டுவந்து வளர்த்தனர். தாத்தா ராமர் விவசாயக்கூலி. பாட்டி யாராவது கூப்பிட்டால் விவசாய வேலைக்கு போவார். இப்போது வரை பாட்டிக்கு என் மேலே ஒரு பெரிய நம்பிக்கை. எப்படியாவது நான் வாழ்ந்து விடுவேன் என்று.. என்கிறார் கைகள் இல்லாது பிறந்து வளர்ந்த வித்யாஸ்ரீ தன்னம்பிக்கையோடு.

வித்தியஸ்ரீ

இரு கைகள் இல்லா தன்னம்பிக்கைப் பெண் இரண்டு கைகள் இருந்தும் சில நேரம் பலர் சோம்பேறிகளாகவே இருந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பெற்றோர்களே கைவிட்டும் இன்றளவும் பிறப்பிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருபவர் தான் வித்யாஸ்ரீ.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமம் தான் வித்தியாஸ்ரீயின் சொந்த ஊர். விவசாயம் தான் அந்த கிராமத்தின் முதுகெலும்பு.அப்பா அண்ணாமலை வயது 65 விவசாயக் கூலி கரும்பு வெட்டும் வேலை, அம்மா பழனியம்மாள் வயது 53. வித்யாஸ்ரீயுடன் பிறந்தவர்கள் அவரோடு சேர்த்து 5 பேர். வித்யஸ்ரீ தான் மூத்தவர். நான்கு தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது 30 வயதாகும் வித்யாஸ்ரீ எம் ஏ ஆங்கிலம் படித்துள்ளார் அது மட்டும் அல்லாமல் பி எட் முடித்துள்ளார்.

சங்கர் வித்தியஸ்ரீ

வித்யாஸ்ரீக்கு ஐந்து வயது இருக்கும் போது பாட்டி வீரம்மாள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கச் சென்றுள்ளார். இரண்டு கைகளும் இல்லை என்று தெரிந்தவுடன் பள்ளிக்கூடத்தில் வித்தியாஸ்ரீயை சேர்ப்பதற்கு மறுத்துவிட்டார் தலைமை ஆசிரியர். விடாமல் பாட்டி வீரம்மாள் அரசுப் பள்ளிக்கூடம் எங்களுக்கானது எங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளையை சேர்க்காமல் இங்கு இருந்து போகவே மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார். “கைகள் இல்லாமல் எப்படி எழுதுவார்? புத்தகத்தைப் பிரித்து எப்படி படிப்பார்? என்று கேள்வி கேட்ட தலைமையாசிரியருக்கு, பதிலடி கொடுத்த பாட்டி, “என் பேத்திக்கு கைகளாக நான் இருக்கிறேன்…” என்று உறுதியாக இருந்து வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்த்துள்ளார் பாட்டி வீரம்மாள். அப்போது சதீஷ்குமார் என்கிற ஒரு ஆசிரியர் வித்தியாஸ்ரீயை பள்ளியில் சேர்ப்பதற்கு பெருமளவு உதவியாக இருந்து பள்ளியில் சேர்த்துள்ளார்.

படிப்பதாக இருந்தாலும் கூட புத்தகத்தை கால்களால் பிரித்து தான் படிப்பேன் இப்போது வரை நான் வெளியூர் செல்வதாக இருந்தால் கூட யாருடைய துணையும் இல்லாமல் நான் மட்டுமே பேருந்தில் வெளியூருக்கு பயணம் செய்வேன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக பணி ஆணை வழங்கினார் இப்போது கிடைக்கிற அந்த வருமானம் என் குடும்பச் செலவுக்காகவே பயன்படுத்தி வருகிறேன் எனக்கென்று எந்த செலவும் பெரிதாக கிடையாது.” ”எனக்கு கைகள் இல்லையே என்று நான் ஒருபோதும் நினைத்தது கூட கிடையாது. என் லட்சியம் எல்லாம் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும், குடும்பத்திற்குத் தேவையான அளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்,” என்கிறார் வித்யாஸ்ரீ.இப்போது கிடைத்துள்ள வண்டி தன் வாழ்வில் மேலும் மெருகூட்டும் என்கிறார்.

சங்கர்

இந்த வண்டியை வடிவமைத்த சங்கர் கூறும் போது.

கால்கள் செயலிழந்து போனவர்களுக்காக வாகனங்களை தயார் செய்து கொடுக்கிற நிறுவனம் வைத்துள்ளேன். இதுவரை கால்கள் இல்லாதவர்களுக்கு தான் வாகனம் தயார் செய்து கொடுத்திருக்கிறேன் முதல் முறையாக வித்தியாவிற்கு கைகள் இல்லாதவர்கள் கால்களாலே இயக்கக்கூடிய வாகனத்தை வடிவமைத்திருக்கிறேன் விரைவில் அரசு அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.தமிழக அரசு வித்தயஸ்ரீக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 

-ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here