கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ சைதன்யா பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக பள்ளி வாகனம் சென்றுள்ளது.

கோவை அருகே பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் படுகாயம்

இன்று காலை மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது. அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை அருகே பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் படுகாயம்

இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அப்போது அந்த பஸ்சில் 5 மாணவர்கள் உள்ளே இருந்த நிலையில் அதில் ஒரு மாணவர் மட்டும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அருகே பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் படுகாயம்

டிரைவர் மற்றும் சக பள்ளி மாணவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

பள்ளி வாகனம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடைய பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை அருகே பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் படுகாயம்

தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சூலூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது.

இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here