சொந்த கட்சியின் வேட்பாளருக்கே பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்யாதது அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாளி மக்கள் கட்சியை 1989-ம் ஆண்டு ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.

நாடாளுமன்ற தேர்தல்

இந்த கட்சியின் சின்னமாக 91-ம் ஆண்டுகளில் ‘யானை’ சின்னம் இருந்தது. தற்போது ‘மாம்பழம்’ சின்னத்தில் பாமக போட்டியிட்டு வருகிறது. கடந்த 91-ம் ஆண்டில் இருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பாமக போட்டியிட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 1991-ம் ஆண்டு 10-வது மக்களவை தொகுதியில் இருந்து தற்போது 17-வது மக்களவை தொகுதி வரை கிட்டத்தட்ட மக்களவை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தி வேனில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ்

அதனை தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் பாமக தலைமையில் பல்வேறு சமுதாயங்களை உள்ளடக்கிய கூட்டணி வைத்தாலும், பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருவார்.

இவரது பிரசாரத்துக்கு பின் பாமக தொண்டர்கள் சுறுசுறுப்பாகி விடுவார்கள். காரணம் அவரது பேச்சு, ஆழமான கருத்துக்களும் தொண்டர்களுக்கு டானிக்காக அமைந்தது. தற்போது 18-வது மக்களவை தேர்தல் அவரது அரசியல் வாழ்க்கையின் 9-வது மக்களவை தேர்தலாகும்.

பாஜக

இந்த நிலையில் இந்த தேர்தல் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவருக்கு ஆர்வம் இல்லை. ஆனால் கட்சி துவங்கிய நாளில் இருந்து சமூக நீதி, இடஒதுக்கீட்டாக பல போராட்டங்களை நடத்தி, அதில் வெற்றியும் கண்டவர்.

சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கு எதிரானது பாஜக என கருதினார். அப்போது திடீரென நள்ளிரவு உருவான பாஜக கூட்டணிக்கு பிறகு சேலத் நிறுவனர் ராமதாஸ், நடந்த பொதுக்கூட்டத்தில் மோடியுடன் பங்கேற்றார்.

பாமக

அதனை தொடர்ந்து பாஜக கூட்டணியில் பாமகவுக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதில் விழுப்புரம் தொகுதியில் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் மொளசூருக்கு சென்று பிரசாரத்தை துவக்கினார்.

பின்பு ஒரு வாரம் கழித்து கடந்த வாரத்தில் வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டுக்கு சென்று பிரசாரம் செய்தார். அதன் பிறகு திண்டிவனம், காஞ்சிபுரம் அரக்கோணம், கடலூர், ஆரணியில் ஓரிரு இடங்களில் மட்டும் பிரசாரம் செய்துள்ளார்.

மோடி

திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் மற்றும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்யவில்லை. இதுபோன்று கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும் சிதம்பரம் மற்றும் புதுவையில் பிரசாரம் செய்ததாது கூட்டணி கட்சியினரை வருத்தம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகி கூறுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாதது இந்த தேர்தலில் தான். அப்போது சூராவளி பிரசாரம் செய்ய உடல்நிலை காரணம் கூறினாலும், கள்ளக்குறிச்சியில் பாமக வேட்பாளருக்கு பிரசாரம் செய்யவில்லை.

சொந்த கட்சியின் வேட்பாளருக்கே பிரச்சாரம் செய்யாத ராமதாஸ்

மேலும் 5 அருகில் உள்ள புதுவை மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், பாமகவுடன் கூட்டணி அமைத்தவுடன் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால் அவருக்கு கூட பிரசாரம் செய்யவில்லை.

இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் அவரது கொள்கைக்கு எதிரான கூட்டணி என்பதால் இயல்பாக அவர் பிரசாரம் செய்வதற்கு மனசு இல்லை என்பது தான் உண்மையான காரணமாகும். இது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையும், சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.

பாமக தொண்டர்கள் சோகம்

விழுப்புரம் தொகுதியில் பெயர் அளவில் இரு இடங்களில் பிரசாரம் செய்ததை தவிர்த்து அருகில் உள்ள கள்ளக்குறிச்சி, சிதம்பரம் மற்றும் புதுவையில் பிரசாரம் செய்யாதது தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here