ராகுல் காந்தி

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி, நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்,

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் உள்ளிட்ட 8 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது;-

காங்கிரஸ்

நான் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறை வரும் போதும் தமிழ்நாட்டு மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, வரலாறு, கலாசாரம், மொழி என்னை மிகவும் ஈர்த்துள்ளது.

எனக்கு தமிழ் தெரியாது என்றாலும், தமிழ்நாட்டின் கலாசாரம், தொன்மையான பண்பாடு, அற்புதமான கவிஞர்கள், அவர்களுடைய சிந்தனைகள் என இந்தியாவை பிரதிபலிக்கிற அற்புதமான கண்ணாடியாக தமிழ்நாட்டை நான் பார்க்கிறேன்.

மோடி

தற்போது பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை தமிழ்நாடு இந்த மண்ணுக்கு தந்துள்ளது. இந்த கூட்டத்தின் முழுமையுமே நான் பெரியார், அண்ணா, கலைஞரை பற்றி பேசிக் கொண்டிருக்க முடியும்.

சமூக நீதியின் பாதையை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள் தான் தெரியபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் நான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து துவங்கினேன்.

பாஜக

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிமீ தூரம் நடந்து இந்த மாபெரும் தத்துவங்களை மண்ணின் மக்களுக்கு சொல்வதற்காக நடந்தோம். இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தில் இருந்து தான் எல்லோரும் நிறைய செய்திகளையும், பண்பாட்டு தரவுகளையும் படிக்க முடியும்.

இதுபோன்ற அருமையான உறவை நான் எங்கும் பார்த்தது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள உறவு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. இந்தியாவிலே ஒரு பெரிய தத்துவ போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

திமுக

ஒருபுறம் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை, மறுபுறம் நரேந்திர மோடி போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், வெறுப்பும், துவஷேமும்.

நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்கிறார். இந்தியாவில் இருக்கும் எந்த மொழியையும் விட தமிழ் மொழி எந்த விதத்திலும் குறைந்த மொழியல்ல.

உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை தொட்டு பார்க்க முடியாது

இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், பண்பாடுகள், கலாசாரங்கள் இருக்கின்றன. ஒரு பண்பாடு, மொழி, கலாசாரத்ததை விட மற்றொரு மொழி, பண்பாடு, கலாசாரம் எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் மொழிக்கு தொடுக்கப்படும் எந்த தாக்குதலும் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.

என்னை பொறுத்தவரை மொழி, கலாசாரம், பண்பாடு மிகவும் முக்கியம். தமிழ் மொழி, வங்க மொழி, பேசப்படும் பல்வேறு மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற ஒரு நாடே இருக்க முடியாது.

மோடி மட்டுமல்ல : உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை தொட்டு பார்க்க முடியாது – ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் ஒரு மாபெரும் தத்துவ போராட்டம். நரேந்திர மோடி மட்டுமல்ல, இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, தமிழ் கலாசாரத்தையோ தொட்டுப் பார்க்க முடியாது என எச்சரிக்கை விடுக்கிறேன்.

இந்த தத்துவப் போர், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கவும் மேற்கொண்டுள்ள யுத்தம். இந்த போரில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என நான் உறுதியாகச் சொல்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here