ரமலான் தொடங்கியவுடன் முஸ்லிம்கள் முழு மாதமும் நோன்பு நோற்பார்கள், ஆன்மீக சிந்தனை, சுய ஒழுக்கம் மற்றும் உயர்ந்த பக்தி ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

ரமலான் மாதம் தொடங்கி நோன்பை முறையாகக் கடைப்பிடித்து பின் பிறை தெரியும் கடைசி நாளை ஈத் உல்ஃபிர் என்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

முஸ்லீம்களின் புனிதமான ரம்ஜான் பற்றிய முக்கியத்துவம்

இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவு கூரும் விதமாக இந்த நோன்பைக் கொண்டாடப்படுகிறது. ரமலான் அரபு மூலமான ரமிடா அல்லது அர்-ரமத் என்பதிலிருந்து உருவானது, இது கொளுத்தும் வெப்பத்தை’ குறிக்கிறது.

ஷஹாதா (நம்பிக்கை), ஸலாத் (தொழுகை), ஜகாத் (தானம் செய்தல்), சவ்ம் (நோன்பு) மற்றும் ஹஜ் (யாத்திரை) இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நோன்பு சூரியன் உதிப்பது முதல் சூரியன் மறையும் உணவு, தண்ணீர், எச்சில் கூட விழுங்காமல் கடுமையாக நோம்பு இருப்பார்கள்.

குர்ஆன்

இந்த ஆண்டு புனித ரமலான் பண்டிகை மார்ச் 12 முதல் உலக முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்கியது. அனைவரும் பிறை ஏப்ரல் 9 தேதி தெரியும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தள்ளிப் போய் ஏப்ரல் 10 தேதி தெரியும் என்பதால் நாளை மறு நாள் (ஏப்ரல் 11ம்) ஈத் உல் ஃபிர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பிறை வெளிப்படுவதில் சற்று வேறுப்படுகள் உள்ளதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏப்ரல் 10 ஆம் தேதி ரமலான் கொண்டாடப்படவுள்ளது.

முஸ்லீம்களின் புனிதமான ரம்ஜான் பற்றிய முக்கியத்துவம்

ரமலான் ஆசீர்வாதங்களின் மாதம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் எந்த ஒரு நற்செயலுக்கும் ஒரு சதவீதம் வெகுமதி கிடைக்கும் என்றால், ரமலான் மாதத்தில் 70 சதவீதம் வெகுமதி கிடைக்கும் என்ற நம்பப்படுகிறது.

நரகத்தின் கதவுகளும் இந்த மாதத்தில் மூடப்படும். இந்த நேரத்தில், மக்கள் 12 முதல் 14 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள், இது உடல் ரீதியாகச் செரிமான அமைப்புக்கு ஓய்வு அளிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here