தமிழகத்தில் இன்று ரம்ஜான் கிடையாது : நாளை தான் ரம்ஜான் பண்டிகை

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை எப்போது? கொண்டாடப்பட உள்ளது என்பது பற்றி அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று ரம்ஜான் இல்லை.

நாளை (ஏப்ரல் 11) தான் ரம்ஜான் பண்டிகை என அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து ஈடுபட்டு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ரம்ஜான் கிடையாது : நாளை தான் ரம்ஜான் பண்டிகை

இந்த ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை விரதம் கடைப்பிடிப்பார்கள். அப்போது மாலையில் இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.

மேலும் ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது இடத்தை பொறுத்து மாறுபாடும். வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடப்படுவது தான் இதற்கு காரணமாகும். இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

ரம்ஜான் பண்டிகை

ஆனால் இந்தியாவில் மார்ச் 12-ம் தேதி தான் பிறை தெரிந்தது. இதனால் தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறதா? இல்லை நாளை கொண்டாடப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி நேற்று பிறை தெரியாததால் தமிழகம், புதுவையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை

இது ஒருபுறம் இருக்க ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிறை தேட வேண்டிய நாளான ஏப்ரல் 9-ம் தேதி தமிழகத்தின் கோவை – சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி – வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டது.

அதன்படி ஏப்ரல் 9 மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 10) நோன்பு பெருநாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இன்று ரம்ஜான் என அறிவிக்கப்பட்டாலும் கூட அரசு தலைமை காஜி இன்று இல்லை.

தமிழகத்தில் இன்று ரம்ஜான் கிடையாது : நாளை தான் ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு

அப்போது நாளை தான் தமிழ்நாடு, புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here