தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;-தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமாகா முதல் கட்சியாக இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பாஜகவுடன் தமாகா கூட்டு சேர்ந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1999-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமாகாவில் ப. சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமாகா தலைவராக இருந்த மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறினார். அதை ஏற்று தமாகாவை சேர்ந்த 3 எம்பிக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது.

அன்று வகுப்புவாத பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே.வாசன் வகுப்புவாத பாஜகவில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐமு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என பல பதவிகளை சோனியா காந்தி வழங்கியிருக்கிறார்.

இன்று ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமாகா உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது.
பாஜகவில் இணைய போகிறாரா? யுடியூபில் எத வேணாலும் போடுவாங்க அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது, திருநாவுக்கரசு ஆவேசம். பாஜகவில் இணைய போகிறேனா என்பதற்கு திருநாவுக்கரசர் எம்பி விளக்கம் அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி அண்மையில் பாஜவில் சேர்ந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசும் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து திருநாவுக்கரசர் எம்பியிடம் கேட்ட போது, ‘‘நான் பாஜகவில் இணைவது போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்க கூடாது.
யூடியூப், சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவு செய்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கோபத்துடன் கூறினார். அடுத்த 100 நாளுக்கு எங்களை வழிநடத்துற ஆசான் வாசன்: அண்ணாமலை உருக்கம். பாஜக கூட்டணியில் தமாகா இணைவதாக ஜி.கே.வாசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசனை தமாகா அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அண்ணாமலை அளித்த பேட்டி; ஜி.கே.வாசனிடம் நான் எப்போதும் அரசியல் ஆலோசனைகள் பெறுவது உண்டு.
அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழி நடத்தக்கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்க போகிறார். அவரது அறிவுறுத்தலின் பேரில் ஒரு வளமான தமிழ் கூட்டணியை உருவாக்குவோம். அதன் மூலம், ஜி.கே.வாசன் மூப்பனாரின் கனவு தமிழக மண்ணிலே நடந்தே தீரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

கடுஞ்சொல் பேசாதவர், வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டவர் ஜி.கே.வாசன். பிரதமர் மோடிக்கும் ஜி.கே.வாசனுக்கும் இருக்கக்கூடிய நட்பு என்பது தனிப்பட்ட முறையில் ஒரு பந்தம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆழமானது.
எல்லோரோடும் சேர்ந்து வளமான இந்தியாவை, வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் நோக்கம். மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் என்றார்.