விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், நீதிமன்ற உத்தரவு படியும், அரசு வழிகாட்டுதலின்,படியும், உயர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன, இதனிடையே விழுப்புரம் நகரம் வி. மருதூர் மற்றும் அதற்கு நீர் செல்லும் வாய்க்கால் பகுதிகளில் பல ஆண்டுகளாக சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஏறிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் காவல்துறை பாதுகாப்புடன் சுமார் 50 வீடுகளை அகற்றினார். நெஞ்சு உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் உபயோகம் செய்தனர். போதிய கால அவகாசம் கொடுத்த நிலையில் இன்று மீண்டும் ஆக்கிரமிப்புகளை ஆகட்டும் பணியை மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று விழுப்புரம் கே.கே ரோடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒரு பகுதியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

அங்கு விரைந்து சென்ற தாலுக்கா காவல் நிலைய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு தான் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது போராட்டத்தை கைவிடுமாறு கூறிய தன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.