தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே உள்ளதால் பிரதமர் மோடி நாளையும், ராகுல் வரும் 12-ம் தேதியும் என அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர். அப்போது ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார்.

பின்னர் மறுபுறம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தொகுதிவாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாநில தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி 6-வது முறையாக 2 நாள் பயணமாக நாளை(9-ம் தேதி) தமிழகம் வருகிறார்.

காங்கிரஸ்

அப்போது நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலையில் அங்கிருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வழியாக ஜி.என்.செட்டி ரோடு மார்க்கமாக பனகல் பார்க் வருகிறார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது.

ராகுல் காந்தி

அப்போது தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டுகிறார்.

ரோடு ஷோவை முடித்து விட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். அப்போது மறுநாள் 10ம் தேதி காலையில் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி

அப்போது காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரான ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பின்னர் கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளனர்.

மேலும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் வர உள்ளனர். இதே போல தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ம் தேதி தமிழகம் வர உள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வருகை

அன்றைய தினம் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென் மாவட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, தமிழகம் வருகை

அங்கு ரோடு ஷோவிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அன்று மாலை கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

அதில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பங்கேற்று பேசுகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் ஆகியோர் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

பாஜக, காங்கிரஸ்

அதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் தேசிய தலைவர்கள் வருகையால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here