கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் மேல்மூரி குட்டிப்புரம் பகுதியில் ஆட்டோவும், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
ஆட்டோ ஓட்டி வந்த அஷ்ரப் மற்றும் பின்னால் இருந்த ஷஜிதா மற்றும் (14 வயது கொண்ட குழந்தை) ஆகியோர் உயிரிழந்தனர். கோழிக்கோடு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த பேருந்து தடம் மாறி பேருந்த வந்த திசையில் வந்தது. அப்போது எதிரே வந்த பஸ் ஆட்டோ மீது மோதியது.

ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து நடக்கும் நேரம் அந்த பகுதியில் லேசான மழை பெய்து கொண்டு இருந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர் மற்றும் குழந்தை உயிர் இழந்து உள்ளது. ஆட்டோவில் இருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் சேதமடைந்தது. பஸ்சில் டிரைவர் மட்டும் இருந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.