கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

Kanyakumari : முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் மோதி விபத்து
கானா நாட்டில் உள்ள முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் என்னும் பகுதியை சேர்ந்த 32 வயதான ஷைபின் என்பவரும் மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த 42 வயதான ஜெயசந்திர சேகர் என்பவரும் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்ளுக்கு முன் வேலை சம்மந்தமாக காரில் ஷைபின் மற்றும் ஜெய சந்திரசேகரும் சென்றுள்ளனர். கார் டோபா என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.

அதில் படுகாயமடைந்த ஷைபின் மற்றும் ஜெய சந்திரசேகர் மற்றும் டிரைவர் உட்பட 3 பேரையும் போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில் போலீசார் ஷைபின் மற்றும் ஜெய சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்கபடும் நிலையில் உயிரிழந்த ஷைபினுக்கு மனைவியும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஜெயசந்திரசேகருக்கு மனைவியும் 7 வயதில் மகனும் 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கானா நாட்டில் நடந்த விபத்தில் குமரியை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.