விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டு விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மோடி

அதில் பேசிய வேல்முருகன், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் போதெல்லாம் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சியாக பாமக உள்ளது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும். அப்போது மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப்பாற்ற முடியாது. நவீன டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கிற பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும்.

பாஜக

இந்த தேர்தல் ராணுவ ஆட்சியை கொண்டு வர துடிக்கிற சக்திகளுக்கும் சமூக நீதிக்காக போராடும் சக்திகளுக்குமான போர் எனக் கூறினார். அதன் பின் கூட்டத்தில்‌ பேசிய து.ரவிக்குமார், இந்த நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமானதொரு தேர்தல். இந்த முறை தேர்தல் என்பது வெறும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல.

இதனால் எப்போதும் உங்களுக்கான ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து அனுப்பும் தேர்தல் கிடையாது. இது இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல்.

விசிக

அப்போது மீண்டும் மோடி ஆட்சி வந்தால் நமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. பாசிச பாரதிய ஜனதா கட்சி சமூக நீதியை காக்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. மேலும் தமிழ்நாட்டின் தனித்தன்மையை அழித்து ஒழிக்க திட்டமிடுகிறது.

நாம் பல நூறு ஆண்டுகள் காத்து வந்த தமிழர்களின் பண்பாட்டு தனித்துவம் தனித்தன்மையை காக்க அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் பணியாற்ற வேண்டும். இதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்.

மீண்டும் மோடி ஆட்சி வந்தால் நமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது – து‌. ரவிக்குமார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என கவலைப்பட வேண்டாம்.

நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நானும் தலைவர் திருமாவளவனும் உங்கள் குரலாக ஒழிப்போம். இந்த தேர்தலில் வெற்றி பெற நீங்களும் எங்களோடு சேர்ந்து பங்காற்ற வேண்டும் என  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here