நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மூத்த நிர்வாகி சம்பித் பத்ரா ஒடிசாவின் பூரியில் பிரதமரின் ரோட்ஷோவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது;- கடவுள் ஜகந்நாத் பகவான் பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடவுளே மோடியின் பக்தர் தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஒடிசாவில் பழங்காலமாக வணங்கப்படும் தெய்வமான ஜெகநாதரைப் பற்றிய அவரின் இந்த கருத்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்.
தற்போது இதற்கு சம்பித் பத்ரா மன்னிப்பு கேட்டு, வாய் தவறி சொல்லி விட்டதாக கூறி உள்ளார். அதில், நான் கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பூரியில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவுக்குப் பிறகு, நான் பல ஊடக சேனல்களுக்கு பைட் கொடுத்தேன், எல்லா இடங்களிலும் நான் அதையே சொன்னேன், பிரதமர் நரேந்திர மோடி மகாபிரபு ஜெகநாதரின் தீவிர பக்தர்.
இறுதியில், மற்றொரு சேனல் எனது பைட்டை எடுத்த போது, அது தெரியாமல் மிகவும் சூடாகவும், கூட்டமாகவும், சத்தமாகவும் இருந்தன. கடவுள் ஒரு மனிதனின் பக்தன் என்று ஒரு நபர் ஒருபோதும் சொல்ல முடியாது, நான் இந்த தவறை வேண்டுமென்றே செய்யவில்லை என்று எனக்கு தெரியும்,

ஆனால் வேண்டுமென்றே செய்யாத தவறுகளை கடவுள் மன்னிக்க வேண்டும். இந்த தவறுக்காக ஜெகநாத் கடவுளுக்கு விரதம் இருக்கிறேன். 1 வாரம் விரதம் இருந்து மன்னிப்பு கேட்க போகிறேன், என்று கூறியுள்ளார்.
இப்படிபட்ட நிலையில் தான் ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிரதமர் மோடி;- நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது பேச்சில், என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான், பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி,
பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.

நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது,ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியை கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம். ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது.
ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்கு போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்? இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளன.

கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.
ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகி விட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.