ஹைதராபாத் அருகே சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடீரென டேங்கர் வெடித்து தீப்பற்றியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம், அடுத்த ஹைதராபாத்தை அருகே உள்ள சங்காரெட்டி மாவட்டம், ஹத்நூரா மண்டலம், சந்தாபூர் எனும் ஊரில் எஸ்.பி. ஆர்கானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

அப்போது ரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென ரியாக்டர் டேங்கர் வெடித்து தீப்பற்றியது. அப்போது தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.

இந்த கோர தீ விபத்தில் தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரான ரவி உட்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தெலங்கானா ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

பின்னர் இவர்களை உடல்களை மீட்டு சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்பு இதனை கண்டவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

7 பேர் பலி – 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை 2 மணி நேரத்திற்கு மேல் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here