மயிலாப்பூரில் நிதி நிறுவனம் மோசடி – பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்..!

2 Min Read

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872 ஆம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

அதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தல்

இந்த நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

அந்த புகாரில், சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்பு தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் தேவநாதன்

அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

தேர்தல் ஆணையத்தில் புகார்

ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a review