2 லட்சம் பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்காமல், விஸ்வகர்மா என குடும்பத்தொழிலை செய்யச் சொல்கின்றனர் என தமிழக அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு, அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
நான் முதல்வன் போன்ற திட்டங்களால் லட்சக்கணக்கானோருக்கு பயிற்சியும், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் நம் திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது.
ஆனால், “ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம்” என்ற பாசிஸ்ட்டுகள், 2 லட்சம் பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்காமல், விஸ்வகர்மா என குடும்பத்தொழிலை செய்யச் சொல்கின்றனர்.
தவறான பொருளாதார கொள்கையால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை இழப்புக்கு காரணமான பாசிஸ்ட்டுகள், அதிகாரத்தை இழக்கும் நாள் தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.