வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு – அன்புமணி

0
33

வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் வேளாண் ஆராய்ச்சியாளர் எம் எஸ் சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அன்புமணி

உணவுக்காக வெளிநாடுகளில் இருந்து உணவு தானிய இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா‌, இன்று உலகில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் எம் எஸ் சுவாமிநாதன் தலைமையேற்று நடத்திய பசுமை புரட்சி தான். பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு தலைமையை ஏற்று இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர்.

எம்எஸ் சுவாமிநாதன்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் , வேளாண் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here