கோவை கணபதி பகுதியில் பிரதமர் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் பேனர் வைத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு பரபரப்பு.
கோவை மாவட்டம், அடுத்த கணபதி கேகே நகர் பகுதியில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து திமுகவினர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு அதை கண்டித்து பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பிரதமர் மோடி குறித்து பேனரை வைத்த திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் சமரசப்படுத்தினர்.
ஆனால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவே மறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனை தொடர்ந்து இரவு 10:30 மணி அளவில் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவினர் 15 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரசியல் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.