தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சில நாட்களுக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இதற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருப்பது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இவரது கருத்து குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்திருக்கிறது. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தமிழர்கள் அவதூறு குறித்து திமுக புகார்

இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது எதற்காக குண்டு வெடிக்க வைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது.

தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை

அப்போது தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர் தற்போது பிடிபட்டிருக்கிறார். இந்த நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரின் சித்தன்னகல்லியில் இந்து மதத்தை சேர்ந்தவர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை

இந்த நிலையில் 17-ம் தேதி மாலையில் இவரது கடையில் அனுமான் பாடல்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அப்போது கடை பக்கமாக நடந்து வந்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இந்த பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பி, கடைக்காரரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தை மையப்படுத்தி, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்கி விட்டனர் என்று பாஜக நேற்று பெங்களூரில் போராட்டம் நடத்தியது.

பாஜக

அதில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்எல்ஏ எஸ் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷோபா கரந்த்லாஜே;- “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருக்கிறது” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை

தமிழர்கள் குண்டு வைத்தார்களா? “புது உச்சத்தில் பிரிவினை அரசியல்.” பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம், இத்துடன் நின்றுவிடாமல் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் கூறியிருந்தார்.

இவரது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்;- “மத்திய அமைச்சர் ஷோபாவின் பேச்சை தமிழர்களோடு சேர்ந்து, கன்னட மக்களும் புறக்கணிப்பார்கள்.

தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் உத்தரவு

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும்.

ஷோபாவின் வெறுப்புப் பேச்சை கவனித்து அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்திருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகாரில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார் என்றும் தமிழக மக்களை இழிவுபடுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here