தலைவர்கள்

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இந்திய அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமர் என்கிற ஒற்றை சொல்லோடு பாஜக தேர்தல் பணியாற்றி வருகிறது. இல்லை போதும் மக்களை வறுத்திய பாஜகவை வீட்டுக்கு அனுப்புவது தான் சரியான முடிவு அதற்கு காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என கூட்டணி அமைத்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நிகழ்த்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார் மம்தா பானர்ஜி. இல்லை மம்தா உடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது என்கிறார் ராகுல் காந்தி.

இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கப்படாத நிலையில் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் மக்களை குழப்பி வருகிறது ஒரு பக்கம். இந்திய அரசியல் கூட்டணிகள் ஒரு பக்கம் இப்படி அறிக்கைகளை விடுத்த வண்ணம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக என மாறி மாறி கூட்டணிகள் அமைப்பதில் மும்பரம் காட்டி வருகின்றனர். ஒரு வழியாக திமுக கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூட்டணி கட்சிகளுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

ஆனால் இந்த தேர்தலில் திமுகவும் உதயசூரியன் சின்னமும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். திமுக கூட்டணியில் இடம் பெற்று வரும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஏழு தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குதேசம் கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்குவது என்றும் அந்த தொகுதிகளில் அவரவர் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும், மேலும் கேட்கும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கருதப்படுகிறது.

அது திமுகவிற்கு பலமும் கூட,இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை வழங்கிட அதிமுக முடிவு செய்துள்ளது. இதை அறிந்த பாமக, தேமுதிக,தமாக, பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டது.தனித்து போட்டியில் நாம் தமிழர் உறுதியாக உள்ளது.விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்ய போகிறது என்றே தெரிய வில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுற்றவுடன் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்த்து இருக்கிறார்கள் மக்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here