புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக போட்டியிட சம்மதம் – முதல்வர் ரங்கசாமி..!

0
34

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். இந்தநிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதனை தொடர்ந்து, தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தை தொடங்காமலே பாஜகவினர் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பாஜக மேலிடம் பொறுப்பாளரும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான நிர்மல்குமார் சுரானா புதுச்சேரியில் முகாமிட்டு கட்சி கூட்டங்களை நடத்தி வந்தார். மேலும், அந்த கட்சியின் தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் ரங்கசாமி

மேலும், தேர்தல் தொடர்பாக எந்த ஒரு எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியும் மவுனம் காத்து வந்தார். இந்தநிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கவுள்ள சூழலில், கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் ரங்கசாமின் கருத்தை அறிய பாஜகவினர் முடிவு செய்து உள்ளனர்.

இதையடுத்து சுரானா தலைமையில் கட்சி தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் ரங்கசாமியை திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட, விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனை ரங்கசாமியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் முதல்வரை சந்தித்தோம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம்

மேலும், சில ஆலோசனகளை முதல்வர் வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தேஜ கூட்டணி தயராக இருக்கிறது. இன்னும் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. மேலும் புதுச்சேரி மக்களுக்கு அதிக அறிமுக நபராகவும், வெற்றி வேட்பாளராக இருக்க வேண்டும் என்றார். இதற்கு சம்மதம் தெரிவித்த பாஜக மேலிடம் பேசி முடிவு எடுத்து, நல்ல வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்தனர்.

2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாராயணசாமி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், பாஜக நியமன எம்எல்ஏ ராமலிங்கம் மற்றும், சத்தியமூர்த்தி ஆகியோரின் பெயர் பட்டியல் டெல்லி தலைமையகத்திற்கு அனுப்பபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here