வாக்கு இயந்திரம்

இந்தியா வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளது. இது இந்தியாவை ஆண்ட, ஆளுகிற கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் ஆகவே அமையும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. குறிப்பாக தற்போது பாஜக அரசு எதிர்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம், கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். விவசாய விளை பொருட்களுக்கு ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் தற்போது வரை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

இது ஒரு பக்கம் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது என்றால் மிகை ஆகாது. இது மட்டும் தான் பிரச்சனையா இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி ஒரு பக்கம் மக்களுக்கு சுமையாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு ஆளும் கட்சியால் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெருமளவு நிறைவேற்றப்படாமல் அறிக்கையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம். தேசிய அளவில் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தாலும் மாநில அளவில் வேலை வாய்ப்பு, கூடுதல் வரிவிதிப்பு, விவசாயிகள் பிரச்சனை, சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் ஏற்படும் நெருக்கடிகள் என தொடர்ந்து கொண்டே போகிறது பிரச்சனைகள்.

இது எல்லாவற்றையும் சரிப்படுத்தும் விதமாக புதிதாக ஆட்சி அமைப்பவர்கள் செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் இவற்றை எதிர்காலத்தில் இந்தியாவை ஆளப்போகும் எந்த கட்சியாக இருந்தாலும் நிறைவேற்றுமா?என்றால் அதுதான் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா, பணப்புழக்கம் அதிகரித்து வருவது ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு மாதிரியாகவே இருந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும் வாக்குகளை பணத்தை கொடுத்து மட்டுமே பெற முடியும் என்கிற நம்பிக்கையை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய பிரிதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள்

இதுவரை அப்படி இருந்தார்களா என்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்படி இல்லாத ஒரு நிலை தான். அப்படி ஒரு ஆட்சியை மட்டுமே மக்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளோ குழம்பி போய் தான் இருக்கிறார்கள்.இதுவரை நடந்த தேர்தல் அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்போடு அமையவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள் ஆனால் இந்த தேர்தல் அப்படி இருக்கப் போவதில்லை. மாறாக மக்களின் பிரதிபலிப்பு மிக மோசமாக இருக்கும் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்யப் போகிறது அரசியல் கட்சிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.மக்கள் தயாராக உள்ளார்கள்.

ஆசிரியர்

தி நியூஸ் கலெக்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here