வேலூரில் வேட்பாளராக தனி ஆளாய் பலாப்பழத்துடன் மல்லுக்கட்டினார் மன்சூர் அலிகான். தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சி

ஆனால், அது தோல்வியடைய சுயேட்சையாக போட்டியிட்டார். இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்;-

நடிகர் மன்சூர் அலிகான்

பூஸ்டர் ஊசி, அடுத்து ஹார்லிக்ஸ் ஊசி என விதவிதமாக கண்டுபிடித்தது போல முதலில் ஈவிஎம் மிஷின் அடுத்து கன்ட்ரோலிங் யூனிட் என என்னென்னவோடு கொண்டு வருகிறார்கள்.

இதற்கு பேப்பரிலேயே தேர்தல் வச்சுடலாம். பாரத பிரதமரை தூக்கி உள்ளே போடுங்க. தாய் கழகத்தில் இணைவதற்காக நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். கடந்த 15 வருடங்கள் முன்பு காங்கிரஸில் இருந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன்.

ராகுல் காந்தி

பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், போய் சேரவில்லை போல. அதனால் தான் கட்சியை தொடங்கினேன். என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்த தேர்தலை ஜெயிச்சிருக்கிறேன்.

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும், நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். கடந்த 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடலை.

காங்கிரஸ் கட்சியில் சேர நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்

நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரை கொல்ல சதி செய்கிறார்கள் என உளறி கொண்டிருக்கிறார்.

ஒரு சாதாரண குடிமகனாக அவரை தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும் என்றார். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here