யானை கூட்டம்

நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீரைத் தேடி வெளியே வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோடை வெயில் காரணமாக தண்ணீரைத் தேடி யானைகள் கூட்டமாக வெளியே வரும் என்பதால் வனத்துறை வாகனவோட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன.வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் என வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. இந்த வனவிலங்குகள், வறட்சி காலத்திலும், தண்ணீர் தட்டுப்பாடின்றி குடித்துச் செல்ல,வனக்குட்டை அமைக்கப்பட்டது.இந்த வனக்குட்டைக்கு, மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி வந்ததால், வனவிலங்குகள், குறிப்பாக யானைகள், இந்த

அந்தவகையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து, தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர்.நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தின. இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

தண்ணீர் இன்றி, வனக்குட்டை வறண்டு, முட்புதராய் மாறியது. பல ஆண்டுகள், இந்த குட்டையில் தண்ணீர் குடித்து பழகிய யானை கூட்டங்கள், தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக வந்து, வனக்குட்டையை பார்த்து ஏமந்தபடி, தண்ணீரை தேடி அலைகிறது.தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த வனக்குட்டையின் தென் பகுதி மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் யானை கூட்டங்கள், ரோட்டை கடந்து செல்கிறது.எந்த நேரத்தில் யானைகள், இந்த ரோட்டை கடந்து செல்லும் என தெரிவதில்லை. திடீரென்று யானைகள் கூட்டத்தை பார்த்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பீதியடைந்து விடுகின்றனர்.தண்ணீர் இல்லாததால், திக்கு தெரியாத திசை நோக்கி யானைகள் செல்வது, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here