அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் பலி..!

1 Min Read

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரில் வேகமாக வந்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -
Ad imageAd image

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நிவேஷ், கவுதம் குமார் ஆகிய இருவரும் அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த ஸ்டேட் யூனிவர் சிட்டியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.

அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் பலி

இந்த நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டியில் காரில் அவர்களது நண்பர்களுடன் இருவரும் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் இவர்கள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. அதில் நிவேஷ், கவுதம் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் பலி

அவர்களுடன் சென்ற மாணவர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது விசாரனையில் இவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மற்றும் ஜனகாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய மாணவர்கள்

இந்த விபத்து நடந்த இடத்தை அரிசோனா போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்படுள்ளது. இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரிசோனா காவல்துறை விசாரணை

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரிசோனா காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a review