Yercaud : கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!

5 Min Read
தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 64 பேர் படுகாயம் அடைந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கோடை காலம் என்பதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

இன்றைய தினம் மாலை ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, 13-வது கொண்டை ஊசி வளைவில் வேகமாக சென்று திரும்பும் போது நிலை தடுமாறிய பேருந்து,

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. மலை சரிவில் தரதரவென இழுத்து வந்து பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது. பேருந்து கவிழ்ந்த போது அதிலிருந்து சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். மற்றவர்கள் பேருந்துக்குள் முட்டி மோதியதில் பெருங்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு சிறுவன் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சேலத்தில் இருந்தும் ஏற்காட்டில் இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸுகள் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சேலம் அரசு மருத்துவமனை

அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான சரக்கு வாகனங்கள் மூலமாகவும், காயம் பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு அழைத்து வரும் வழியில் இரண்டு ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. விபத்தில் காயம் அடைந்த 55 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் காவல்துறை ஆணையாளர் விஜயகுமாரி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளானவர்களில் ஏராளமானோருக்கு கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் வலியால் துடிக்கும் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மணி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்;-

அப்போது மாலை 6 மணியளவில் ஏற்காட்டில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்த 69 பயணிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 64 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

அதில் 6 பேர் தனியார் மருத்துவமனைக்கு மேற் சிகிச்சைக்காக சென்று விட்டனர். மீதமுள்ள 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பல பேருக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சிலருக்கு கால், கை முறிவு, தோள் மற்றும் இடுப்பு இறங்கி இருக்கிறது. வயிற்றில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை மருத்துவர்களும் வந்து விட்டனர்.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

இரத்தம் தேவையான அளவு இருக்கிறது. 10 யூனிட் ரத்தம் தன்னார்வலர்கள் கொடுத்துள்ளனர். தற்போது இரத்தம் தேவையில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர விபத்து பிரிவில் ஒருவர் மட்டும் இருக்கிறார். இரண்டு, மூன்று மணி நேரத்தில் அனைவரும் மஞ்சள் மண்டலத்திற்கு அனுப்பி விடுவோம்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர்

பச்சை மண்டலத்தில் 30 பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தரையும் பரிசோதித்து விட்டு வார்டுக்கு அனுப்பி விடுவோம் என தெரிவித்தார். இறந்த கார்த்திக்கின் சகோதரி பேசும் போது;-

நீங்க ஜி ஹெச்க்கு வாங்க என்று சொன்னாங்க நாங்க வந்து ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. எங்க தம்பியை பார்க்க முடியலை. கொஞ்சம் அடிபட்ட மற்றவர்கள் இருந்தாங்க. என்னுடைய தம்பி சம்பவ இடத்திலேயே பலின்னு கொண்டு வந்தாங்க. பஸ் நிறுவனம் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்குது.

இறந்த கார்த்திக்கின் சகோதரி

இன்னும் எத்தனை பேர் அடிபட்டு முடியாம இருக்காங்க என தெரியலை. பஸ் மெயிண்டனன்ஸ் இருக்கான்னு தெரியலை. மலையில ஓட்டும் போது எவ்வளவு கவனமாக இருக்கனும். கூலி வேலைக்கு போறவங்க அந்த பஸ்ல தான் போவாங்க.

நிற்பதற்கு கூட இடமில்லாம 80 பேர் பயணித்திருக்கிறார்கள். என்னுடைய தம்பி நிற்க இடமில்லாமல், டிரைவர் சீட்டுக்கு பின்னால் நின்று இருக்கிறான். கை, கால் உடைச்சிருக்கு, முகம், உடம்பில அடிபட்டு இருக்குது.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

அவனுக்கு 36 வயசுதான் ஆச்சு, இன்னும் கல்யாணம் ஆகலை. காலையில வந்தவன் என் வீட்டுக்காரர் கிட்ட, கால் புண் ஆறும் வரை வேலைக்கு போகாதேன்னு சொல்லி 500 ரூபாய் கொடுத்துட்டு, முடிவெட்டிட்டு போயிருக்கான். என் அம்மாவுக்கு நடக்க முடியாது.

ரொம்ப கஷ்டமான சூழலில் குடும்பம் நடத்தி வருவதாகவும், இந்த பஸ் கம்பெனி மேல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார். விபத்திற்கு பிறகு சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30km வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.

தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review