கோவை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..!

3 Min Read

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம் , சிறுமுகை உள்ளிட்ட 7 வனச்சரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் 3 மாதங்களுக்கு கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

- Advertisement -
Ad imageAd image

இவ்வாறு வலசை செல்லும் நூற்றுக்கணக்கான யானைகள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான சிறுமுகை பகுதிக்கு வந்து பின்னர் அங்கிருந்து நீலகிரிக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கும் பிரிந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் யானைகளின் வலசை காலம் 3 மாதங்கள் மட்டும் இருந்தாலும் யானைகள் வலசை சென்றாலும் குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் வனச்சரகத்தில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்த யானைகள் அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிடுவதும், ஒரு சில யானைகள் வனத்திற்கு உள்ளே தங்கி இருப்பதுமாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்

இந்த நிலையில் கோயம்புத்தூர் போடுவான் பட்டி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்தில் உள்ள 3 யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வகுந்து வந்தேன் ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த 3 யானைகளும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்தது. அப்போது அங்கு கட்டிட தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து 3 யானைகளும் அரிசியை தேடியது.

இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உயிர் பயத்தால் உள்ளேயே பதுங்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப்போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்;- தாய் யானையுடன் வரும் குட்டியானை மற்றும் ஆண் யானை என ஒரு குழுவாக இந்த 3 யானைகள் உள்ளன. இந்த 3 யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது எந்த வீடாக இருந்தாலும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை சாப்பிட்டு வருகிறது. மற்ற யானைகள் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும் சேதப்படுத்துவதோடு நின்று விடுகிறது.

கோவை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்

ஆனால் இந்த 3 யானைகளும் எங்கு அரிசி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது. இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்போது வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும் இந்த யானைகள் பயப்படுவதில்லை. அதே சமயம் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும் வனத்துறையினர் தயங்குகின்றனர்.

அப்போது வீடுகளை உடைக்கும் போது உள்ளே இருப்பவர்களின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வெளியே வராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a review