விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர்.
இந்த நிலையில் வருடந்தோறும் நடைபெறும் மாசி பெருவிழா இந்த வருடம் மார்ச் 8 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும்.

இந்த விழாவில் மயான கொள்ளை, தீமிதி, திருத்தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 14 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இருப்பினும் சிவனுக்கு பிடித்திருந்த பிரம கத்தி தோஷத்தை நீக்கி ஆக்ரோஷமாக இருந்த அம்மனை மூவர்கள், தேவர்கள், ரிஷிகள் தேரில் அமர வைத்து சாந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதிய பச்சை மரங்களான பனைமரம், காட்டுவாமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை கொண்டு ஒரு மாதத்தில் செய்து முடிக்கப்பட்ட தேரில் அம்மனை அமர வைத்து மாடவீதியில் வீதி உலா வந்து 3 நாட்களுக்குப் பிறகு முற்றிலுமாக தேர் கலைக்கப்பட்டும்.
அப்போது தேர்த்திருவிழா அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு பெற்ற மாசி பெருவிழா திருத்தேரோட்டத்திற்கான புதிய தேர் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.