மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் மீது வெறுப்பு – வைகோ கண்டனம்..!

3 Min Read

நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார் என்று பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து, கடும் எதிர்ப்பு தேசிய அளவில் கிளம்பி உள்ளது. விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் கி.வீரமணி உள்ளிடட பல்வேறு தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் மீது வெறுப்பு

அந்த வரிசையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பாஜக தற்போது நடக்கும் பிரசாரத்தில் மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது.

பாஜக

இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பிரதமர் மோடி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் மீது வெறுப்பு

எனவே தான் ஆர்.எஸ்.எஸ். தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார்.

இது கடும் கண்டனத்துக்குரியது. பிரதமரின் இந்த பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.

மதிமுக

ஆனால் நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” என்று காட்டமாக கூறியுள்ளார் மூத்த தலைவர் வைகோ.

முன்னதாக, ஏ.ஐ.எம்.ஐ கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி சொல்லும் போது, நாங்கள் என்ன ஊடுருவல்காரர்களா? அதிக குழந்தைகளுடன் உள்ளவர்களா? வாஜ்பாய்க்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா? அலங்காரம்: யோகி ஆதித்யநாத்தின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை 7 பேர்.

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் மீது வெறுப்பு – வைகோ கண்டனம்

அமித்ஷாவுடன் உடன் பிறந்தவர்கள் 7 பேர், மோடி மற்றும் அவருடன் உடன் பிறந்தவர்கள் 6 பேர். தாஜ்மகால், குதுப் மினார், செங்கோட்டை, ஜமா மஸ்ஜித் ஆகியவற்றை இந்த நாட்டுக்காக தந்தவர்கள் நாங்கள்.

தேசத்தை நாங்கள் அலங்காரப்படுத்தினோம். நாங்கள் ஊடுருவல்காரர்கள் இல்லை. இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த நாடு எங்களுடையது.

மோடி

இந்த தேசம் நம்முடையது, நம்முடையதாக இருக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மூத்த தலைவர் கி.வீரமணி இதை பற்றி கூறும் போது, “இன்னும் 35 நாள்களும் நாட்டில் பிரச்சாரம் எவ்வளவு மோசமாகுமோ! அதற்கு தடுப்பே இல்லையா?

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும், மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என்று கேட்டிருக்கிறார். விசிக திருமாவளவனோ, சட்டப்பிரிவை விலாவரியாக எடுத்து கூறியிருக்கிறார்.

வைகோ கண்டனம்

பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்த பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும்.

இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின் படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டுமென்றால், தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார் திருமா.

Share This Article
Leave a review