திருமணம் நடைபெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வேலையில் , இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் , விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் , முத்தோப்பு திடீர்குப்பதை சேர்ந்தவர் தயா – ராசாத்தி தம்பதியனர் , இவர்களுக்கு திருமணம் முடிந்த ஒரு பெண்ணும் , D பாலா (வயது 26) என்கிற இளைய மகனும் உள்ளார்.
இன்று மாலை சரியாக 4 : 20 மணி அளவில் , பூத்தமேடு அய்யனாரப்பன் கோவிலுக்கு அவரது நண்பர் சூர்யா (வயது 23 ) என்பவருடன் சென்று , சாமி கும்பிட்ட்டுவிட்டு செஞ்சி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வழியில் , அவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து , அருகில் சென்று கொண்டிருந்த (tata ace ) வாகனத்தில் மீது மோதியது , இதன் தொடர்ச்சியாக அவர்களது இரு சக்கர வாகனம் எதிரில் வந்த காரின் சக்கரத்தினுள் மாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் துறையினர் , அவர்களது உடலை மீட்டு , விழுப்புரம் அரசு மருத்துவமனையில் , உடற்கூராய்விற்காக வைத்துள்ளார் .
திருமணம் நடைபெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வேலையில் , இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் , விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது