மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு , அறைகளை சுற்றி சிசிடிவி கேமராக்கள் , போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி.

மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.

சிசிடிவி காட்சிகள்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணியானது நடைபெற்றது.

தமிழக காவல்துறையினர்

மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது .

மத்திய பாதுகாப்பு படையினர்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் , 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு இயந்திரங்களை 6 அறைகளில் தனி தனியாக வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – மாவட்ட ஆட்சியர்

இந்த அறைகளை பாதுகாக்க ஒரு சுழற்சிக்கு 24, மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளிட்ட 233, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் அரசியல் கட்சியினர் அறைகளை பார்பதற்கு தனியாக சிசிடிவி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி தொடர்ந்து இயங்குவதற்கு தடை இல்லா மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here