தமிழக மீனவர்கள் விவகாரம் : விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்.? – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

2 Min Read

தமிழக மீனவர்கள் விவகாரத்தில், விஸ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவு;-

- Advertisement -
Ad imageAd image

கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தால் தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.

பிரதமர் மோடி

திமுக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பாஜக அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?

பிரதமர் மோடி

அப்போது படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

அப்போது 2-வது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பாஜக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது தான்.

ஸ்டாலின்

இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை, தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்புத்திட்டங்கள் என்ன என்று ‘பதில் சொல்லுங்க பிரதமரே’ என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஸ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?

தன் சொந்த இயலாமையை மறைக்க திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்.

Share This Article
Leave a review