தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு – முதல்வர் மு.க. ஸ்டாலின்…!

6 Min Read

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொருளுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஏழை மக்கள் பொங்கல் கொண்டாடுவதற்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேநேரம், அரிசி அட்டை வைத்திருக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்தப் பொருளும் இல்லாத அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுதொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு வீடு, வீடாகவும் மற்றும் ரேசன் கடைகளிலும் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அரிசி அட்டைதாரர்கள் பலருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் பெறும் அரிசி அட்டைதாரர்களில் பலருக்கும் டோக்கன் விநியோகிக்கப்படவில்லை.

டோக்கன் கிடைக்காத அரிசி அட்டைதாரர்கள் ரேசன் கடைகளில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த செயல் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அரிசி அட்டை வைத்திருக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

அதேநேரம், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் இல்லாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்பான அரசாணையில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் இதன்மூலம் சுமார் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளதாகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கே. கோபால் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி வரவுள்ளதால், இன்றுமுதல் வரும் 13-ம் தேதி மாலைக்குள் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு விடுபட்டவர்களுக்கு 14-ம் தேதி வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பு

இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சர்க்கரை அட்டைதாரர்கள்,
தமிழக அரசின் நிவாரண உதவி, பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரிசி அட்டை வைத்திருக்கும் லட்சங்களில் மாத சம்பளம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில்லை.

சமீபத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை ரூபாய்.6 ஆயிரம் மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரிசி அட்டை வைத்திருந்த வருமானவரி செலுத்துபவர்களுக்கு அரசின் நிவாரண உதவி 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அவர்கள் உண்மையாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்களா, இல்லையா என்பதை கூட சரிபார்க்கவில்லை. அரிசி அட்டை மட்டுமே தகுதியாக பார்க்கப்பட்டது. குறைவான மாத ஊதியம் பெறுபவர்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரணத்தொகை எதுவும் கிடைப்பதில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியவர்கள்

அதுவே, வசதியானவர்களாக இருந்து அரிசி அட்டை வைத்திருந்தால் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரிசி அட்டைதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் பார்க்கப்படுகின்றனர்.

ஏழை மக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டன.

அதனை பயன்படுத்தி லட்சக்கணக்கான சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைதாரர்களாக மாறிவிட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 6 லட்சம் சர்க்கரை அட்டைகள் மட்டுமே உள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களை அரிசி அட்டைதாரர்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சர்க்கரை அட்டைதாரர்கள் தமிழக அரசின் நிவாரண உதவி, பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரிசி அட்டை வைத்திருக்கும் லட்சங்களில் மாத சம்பளம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் குறைவான மாத ஊதியம் பெறும் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் மறுக்கப்பட்டது.

பரிசு பொருள் மற்றும் பணம் வாங்கியவர்கள்

அதேவேளையில், அரிசி அட்டை வைத்திருந்த வருமானவரி செலுத்துபவர்களுக்கு அரசின் நிவாரண உதவி 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அவர்கள் உண்மையாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்களா, இல்லையா என்பதை கூட சரிபார்க்கவில்லை. அரிசி அட்டை மட்டுமே தகுதியாக பார்க்கப்பட்டது.

குறைவான மாத ஊதியம் பெறுபவர்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரணத்தொகை எதுவும் கிடையாது. அதுவே, வசதியானவர்களாக இருந்து அரிசி அட்டை வைத்திருந்தால் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அரிசி அட்டைதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் பார்க்கப்படுகின்றனர். ஏழை மக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக எதுவும் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டன. அதனை பயன்படுத்தி லட்சக்கணக்கான சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைதாரர்களாக மாறிவிட்டனர்.

தற்போதைய நிலையில் சுமார் 6 லட்சம் சர்க்கரை அட்டைகள் மட்டுமே உள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களை அரிசி அட்டைதாரர்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Share This Article
Leave a review