தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெறும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
29
பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி .” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2024- ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் விழுப்புரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு (வெள்ளிக்கிழமை) இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,44,350 பெண் வாக்காளர்கள் 7,58,545 மற்றும் இதர வாக்காளர்கள் 220 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு விழுப்புரம் தனி தொகுதிக்கு 1732 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். மேற்படி வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விழுப்புரம் பானை கிராமத்தில் ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனை சேரி செய்யும் வேலையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .

இன்று காலை 8 அளவில் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

வாக்களித்த பின்னர் அவர் சேத்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ” தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை உருவாக்கும் என்று  தெரிவித்தார் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here