மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு .
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு

தமிழக அமைச்சர் பொன்முடி குடும்பத்துடன் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தமிழக முதலமைச்சரின் முயற்சி இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார் .

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவுடன் தொடங்கியது. விழுப்புரத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ,   சுயேட்சி வேட்பாளர்கள் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

2024- ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல்  விழுப்புரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு (வெள்ளிக்கிழமை) இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,44,350 பெண் வாக்காளர்கள் 7,58,545 மற்றும் இதர வாக்காளர்கள் 220  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு விழுப்புரம் தனி தொகுதிக்கு 1732 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்

மேற்படி வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விழுப்புரம் பானை கிராமத்தில் ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனை செறி செய்யும் வேலையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தூய பால்ஸ் நர்சரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சி பழனி தனது வாக்கினை செலுத்தினார்  .
இதேபோல் விழுப்புரம் எம்ஆர்ஐசி உயர்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்கு செலுத்தினார் .
விழுப்புரம் எம்ஆர்ஐசி உயர்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்கு செலுத்தினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முதலமைச்சர் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதேபோல் பாமக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்திலும்    , விழுப்புரத்தில் , விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் , விழுப்புரம் நாடளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின்  வேட்பாளர் மற்றும் விசிக கட்சி பொது செயலாளருமான துரை ரவிக்குமார் , அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் தங்களது வாக்குகளை செலுத்தினர் .
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் மு.களஞ்சியம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்கள் சென்னையில் உள்ள ராமாபுரத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார் .
விழுப்புரம் சரக டிஐஜி
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் விழுப்புரம் சரக டிஐஜி மற்றும் எஸ்பி தனித்தனியே நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here