Arakkonam : முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் , ரீல்ஸ் பார்த்து டைம் பாஸ் செய்த அரசு அதிகாரிகள் !

2 Min Read
மக்களுடன் முதல்வர் முகாமில் ரீலிஸ் பார்க்கும் அரசு அதிகாரிகள்

அரக்கோணம் ஒன்றியத்தில் தொடர்ந்து கண்துடைப்புக்காக நடத்தப்பட்டு வரும் மக்களுடன் முதல்வர் முகாம் . சொற்ப அளவிலே பொதுமக்கள் கலந்து கொண்டதால் ரீல்ஸ்களை பார்த்து பொழுதை கழித்த அரசு அதிகாரிகள் .

- Advertisement -
Ad imageAd image

தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

அரசு சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மக்களுடன் முதல்வர் முகாம்

முதல் கட்டமாக இந்த திட்டம், நகர்ப்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதற்காக நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகளின் கீழ் உள்ள 44 சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிதாக வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் பயன் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் வகையில், ஊரக பகுதிகளிலும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மக்களுடன் முதல்வர் முகாம்

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற மக்கள் உட்பட பலரும் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால் பல மாவட்டங்ககளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதால் மக்களுடன் முதல்வர் முகாம்கள் பயனற்ற நிலையில் நடத்தப்பட்டு வருகிறது .

அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலர்கள்

அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று பெருமூச்சு பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய முறையில் மக்களுக்கு சென்றடையவில்லை எனவும் , முகாம் குறித்து எந்த முன்னறிவுப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் , முகம் குறித்தான விளம்பர நோட்டீசிகள் கூட கிராம மக்களுக்கு வழங்கபடவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முகாமிற்கு குறைவான அளவிலே பொது மக்கள் கலந்து கொண்டதால் , முகாமிற்கு வந்த அரசு அதிகாரிகள் ஒய்யாரமாக செல்போன்-இல் ரீல்ஸ்களை பார்த்து பொழுதை கழித்தனர் .

வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலர்கள்

ஏற்கனவே கடத்த முறை நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போது மக்கள் இன்றி வெறிச்சோடியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இதன் மீது தமிழக அரசு உடனடியாக விசாரணை மேற்கொண்டு தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share This Article
1 Review