கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்களாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் வரும் மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படள்ளது என கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் தகவல் .
தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்துடன் ஆய்வு செய்த கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நெல்லின் தரம் மற்றும் சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ,மழைக்காலங்களில் நெல் சேமிப்பு கிடங்குகளில் ஒரு நெல் கூட நனைந்து வீணாகாமல் தடுத்திட நெல் சேமிப்பு கிடங்குகளில் மேற்கூரைகள் அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது .
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 33.14 லட்சம் மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது . அதற்க்காக 3.71 லட்சம் விவசாயிகளுக்கு, 7 ஆயிரத்தி 221 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் 2.8 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் கால்நடைகள்கள் வளர்ப்புக் கடனாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவலை தெரிவித்தார் .
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , வரும் மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது என்றார்.

தேர்தல் நேரத்தில் துவரம்பருப்பு, பாமாயில் ஒப்பந்தம் போட தாமதமானது. தற்போது போர்க்கால அடிப்படையில் ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு , பாமாயில் உள்ளிட்ட சமையல் உபயோக பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுள்ளது என தெரிவித்தார்.