பள்ளி வாகன சக்கரத்தில் நசுங்கி எல்.கே.ஜி. மாணவன் பலி : பெற்றோர் உறவினர் மற்றும் சாலை மறியல்…!

2 Min Read

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பாச்சாங்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ராமன். இவர் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சைலா இவர்களுக்கு சாய்சரண் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்த சிறுவன் பெத்தாம்பாளையம் பகுதியில் ராஜா மெட்ரிக் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தான். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைகள் எல்லாம் முடிந்து இன்று மீண்டும் பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு பள்ளி வாகனத்திலேயே வீட்டிற்கு வந்துள்ளான்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது வீட்டின் அருகே பள்ளி வாகனத்தில் வந்து இறங்கிய சிறுவன் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்ற போது, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மணி சிறுவன் சாலையில் செல்வதை கவனிக்காமல் வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் பள்ளி வாகனத்தில் பின் பக்க சக்கரத்தில் சிறுவன் சிக்கி உள்ளான், இது தெரியாமல் ஓட்டுனர் மணி வாகனத்தை இயக்கியதால் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்கள் உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனை

ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மணியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அப்போது சாலையோரம் குழந்தைகளை இறக்கி விட்டு பிறகு வாகனத்தை திருப்பும் போது பின்பக்கமாக வாகனத்தில் சிக்கிய சிறுவன் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி விஜயகுமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் நேற்று மாலை ராஜா மெட்ரிக் பள்ளியில் பயிலும் சாய்சரண் என்ற 6 வயது சிறுவன் அதே பள்ளி வாகனம் மோதியதில் பலியானான்.

பெற்றோர் உறவினர் மற்றும் சாலை மறியல்

மேலும் பள்ளி நிர்வாகம் அஜாக்ரதையாக செயல்பட்டதாகவும், குழந்தை இறப்புக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று குற்றச்சாட்டு வைத்து திருப்பூரில் இருந்து பொங்கலூர் செல்லும் சாலையில் கள்ளிமேடு பகுதியில் பெற்றோர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பள்ளி தாளாளர் வரவேண்டும் என்று கோரிக்கையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review