கோவையில் தனியார் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் KGISL என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பபிஷா (18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கீழே குதித்ததில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104