அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் தீ விபத்தில் சிக்கி பலி..!

1 Min Read

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவை சேர்ந்த 27 வயதான இளைஞர் பசில் கான், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மான்ஹட்டன் நகரில் வசித்து வருகிறார். அங்கு உள்ள The Hechinger Report என்ற கல்வியில் புது கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலை குறித்து செய்தி வெளியிடும் நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி உள்ளார்.

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் தீ விபத்தில் சிக்கி பலி

தற்போது மான்ஹட்டன் பகுதியில் 6 மாடி குடியிருப்பில் பசில் கான் வசித்து வந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தீ விபத்தில் சிக்கி பசில் கான் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தீ விபத்தில் சிக்கிய 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அப்போது குடியிருப்பில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியால் இருந்து புகை வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா

மேலும், இந்திய இளைஞர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து உள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர, அவரது உடலை சொந்த ஊட் கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், அதுவரை இளைஞரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என்றும் இந்திய தூதர் தெரிவித்து உள்ளார். அண்மைக் காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் உயிரிழப்பு என்பது அதிகரித்து காணப்படுகிறது.

இந்தியா

இருப்பினும் நடப்பாண்டு தொடங்கிய 2 மாதத்தில் பசில் கானுடன் சேர்த்து அமெரிக்காவில் இந்தியர்கள் உயிரிழப்பு சம்பவத்தின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review