ஐபிஎல் டி20

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 17வது சீசனில் மொத்தம் 10 அணிகள் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன.

சேப்பாக்கம் மைதானம்

ஒவ்வொரு அணியும் ரவுண்டு ராபின் முறையில் உள்ளூரில், வெளியூரில் என மற்ற 9 அணிகளுடன் தலா 2 முறை மோத உள்ளன. 70 லீக் ஆட்டங்கள், பைனல் உள்பட பிளே ஆப் சுற்றில் 4 ஆட்டங்கள் என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறும்.

சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. தொடக்க விழா காரணமாக இரவு 8.00 மணிக்கு ஆட்டம் தொடங்கும். மற்ற நாட்களில் இரவு 7.30க்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால் முறையே மாலை 3.30, இரவு 7.30க்கு தொடங்கும்.

ஐபிஎல் டி20

சென்னை அணி புதிய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலும், ஆர்சிபி அணி டு பிளெஸ்ஸி தலைமையிலும் களமிறங்குகின்றன. விக்கெட் கீப்பராக தோனி விளையாட உள்ளார்.

சிஎஸ்கே 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், முதல் பட்டத்துக்காக முட்டிமோதும் ஆர்சிபி, 17வது சீசனை வெற்றியுடன் தொடங்க பலப்பரீட்சை நடத்துகிறது.

CSK

டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துள்ள நிலையில், இன்று சேப்பாக்கம் அரங்கம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமில்லை. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரம் வரையிலும் டிக்கெட்டை காண்பித்து சேப்பாக்கத்தில் இருந்து இலவசமாக மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCB

அரசு ஏசி பேருந்தில் பயணிக்க முடியாது. ஐ பிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல், ஐபிஎல், கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதாம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

டிக்கெட்

ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் புதியபுதிய அப்டேட்கள் மற்றும் விதிமுறை மாற்றங்கள் தான் ஐபிஎல்லை தொடர்ந்து நம்பர் 1 லீக்காகவே வைக்க காரணமாகும். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் பவுலர்கள் ஒரு பவுன்சர் வீச மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது பவுன்சர் வீசினால், ஒயிட் வழங்கப்படும்.

ஆனால் தற்போது பேட்ஸ்மேன்கள் கேம் என்று அழைக்கப்படும் டி20 போட்டிகளில், சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசும் விதிமுறை 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CSK

இதன்படி, ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை பவுலர்கள் வீசுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இரண்டு பவுன்சர்களுக்கு மேல் வீசப்பட்டால் நோ-பால் வழங்கப்படும்.

ஐபிஎல் தொடரின் தனிச்சிறப்பாக இருந்துவரும் விதிமுறையானது, ஸ்டம்பிங்களுக்கு ரிவ்யூ கேட்கப்படும் போது கேட்சும் சரிபார்க்கப்படுவது.

இது சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் இருந்து வேறுபட்டாலும், இந்த நடைமுறையானது ஃபீல்டிங் பக்கத்திற்கு நியாயம் மற்றும் நன்மையை உறுதிசெய்யவும், விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பின்பற்றும் வகையிலும் ஐபிஎல்லில் பின்பற்றப்படுகிறது.

RCB

இந்த ஐபிஎல் தொடரிலும் இது பின்பற்றப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு டூ-ரிவியூக்கள் கைவசம் இருக்கும் முறை 2024 ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறது. அதன்படி ஒவ்வொரு அணியும் ஒய்டுகள் மற்றும் நோ பால்களுக்கு எதிராகவும் ரிவ்யூ கேட்க முடியும்.

சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச வேண்டும் என்ற ஸ்டாப் க்ளாக் விதிமுறையை அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் தொடரில் அந்த விதிமுறை பயன்படுத்தப்படுமோ என்ற கேள்வி இருந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஸ்டாப் க்ளாக் விதிமுறைக்கு நோ சொல்லப்பட்டுள்ளது.

முதல் போட்டி CSK – RCB மோதல்

இந்த விதிமுறை டி20 உலகக்கோப்பையில் பின்பற்றப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இது புதிய அதிவேக கேமராக்கள் அமைப்பின் உதவியுடன் செயலபடும், அதாவாது மைதானத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 9 அதிவேக ஹாக்-ஐ கேமராக்கள் நிலைநிறுத்தப்படும்.

இது தவிர இரண்டு ஹாக்-ஐ கேமராக்கள் 3வது நடுவர்களுடன் ஒரே அறையில் வைக்கப்பட்டு, நிகழ்நேர படங்கள் மற்றும் தரவுகளை விரைவாக வரிசைபடுத்தி முடிவெடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.

ஐபிஎல் டி20 2024

அதற்கும் மேல், ‘பார்வையாளர்கள் டிவி நடுவருக்கும் ஹாக்-ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையிலான உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பை” இந்த அம்சத்தில் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here